ரவுடி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

2பார்த்தது
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் அருகே ஏரிக்கரை ஓரத்தில் நவீன் (28) என்பவர் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக, நவீனின் நண்பர்களான பிரவீன் (21), மணி (35), விக்கி (20), ஆகாஷ் (19) ஆகியோர் சேர்ந்து இந்தக் கொலையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.