பூந்தமல்லியில் இருசக்கர வாகன திருடர்கள் மூவர் கைது

494பார்த்தது
பூந்தமல்லி அடுத்த வானகரம் பகுதியில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த சுனில் (23), சிலம்பரசன் (26), ஹானஸ்ட் ராஜ் (20) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அஸ்வின் மற்றும் தயாளன் ஆகியோரின் வாகனங்கள் திருடுபோன புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த மூவரும் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி