திருவள்ளூர் அருகே, பொதட்டூர்பேட்டையில் பாட்டி வீட்டில் தங்கிப் படித்த மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த தீனா என்பவருடன் பழகி வந்துள்ளார். காதல் வயப்பட்ட இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். திருமணம் செய்வதாகக் கூறிய தீனா, பின்னர் மறுத்ததோடு, மாணவியின் கருவைக் கலைக்கவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீனாவை நேற்று (மே 24) கைது செய்தனர்.