திருவள்ளூரை அடுத்த வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகரைச் சேர்ந்த ரவுடி நவீன் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மணவாளநகரைச் சேர்ந்த பிரவீன், விக்னேஷ், ஆகாஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது, தப்பி ஓட முயன்ற டியுக் பிரவீன் என்ற மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரும் ரவுடி கொலை வழக்கில் தொடர்புடையவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.