திருவொற்றியூர் கரிமேடு சந்திப்பில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்த வேதநாதன்(23) என்பவரிடம் இருந்து ₹34.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு பணம் நிரப்புவதற்காக எடுத்து வந்ததாக அவர் கூறியபோதும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.