நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் விவசாயிகள் ஏமாற்றம்

1பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் நெடுவரம்பாக்கத்தில் செயல்படும் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையம், தொடர் மழையால் கடந்த 45 நாட்களாக அடிக்கடி மூடப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம், கங்காடி குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 5000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் பதிவு முறையிலும், வியாபாரிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், தங்களை ஏமாற்றி கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டதாகவும் விவசாயிகள் மணி நாயுடு, சந்திரசேகர், ஜெயராமன், கோபி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். மழையால் நெல் முளைக்கும் அபாயம் உள்ளதால், கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறந்து நெல்லைக் கொள்முதல் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி