திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் வ. உ. சி நகரில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, கஞ்சா வியாபாரியும் சரித்திர பதிவேடு ரவுடியுமான கைப்புள்ள தினேஷ் (35) கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் புதுப்பேட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் பாலமுருகன் (39) என்பவர் தனக்கு மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து கொடுப்பதாகவும், அதை வீட்டில் வைத்து பாக்கெட்டுகளாக மடித்து விற்பனை செய்வதாகவும் தினேஷ் தெரிவித்துள்ளார். தினேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.