ஆவடி CRPF வளாகத்தில் பயிற்சி முடித்த வீரர்களின் நிறைவு விழா

5பார்த்தது
ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வான ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஜார்காண்ட், மணிப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1380 வீரர்களுக்கு 44 வார கால கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. காடுகளில் உயிர் வாழ்தல், வெடிகுண்டுகளைக் கையாளுதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், பாதைகளைக் கண்டறிதல் போன்ற உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்த வீரர்களின் பயிற்சி நிறைவு மற்றும் கண்கவர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமை இயக்குனர் கைநேந்திர பிரதாப் சிங் IPS சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறந்து விளங்கிய காவலர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி