திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (50), செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சீனிவாசன், இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது தம்பி உள்ளிட்ட உறவினர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.