அருள்மிகு பொன்னியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக திருவிழா

0பார்த்தது
திருவொற்றியூரில் 10 அடி உயரத்தில் பாம்பு புற்றாக இருந்த கோவிலில், ஆங்கிலேயருக்கு பொன்னியம்மன் கனவில் தோன்றி கோவில் கட்ட கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புனரமைக்கப்பட்ட இக்கோவிலில், வெள்ளிக்கிழமை காலை கோ பூஜையுடன் கணபதி ஓமத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை திறக்கப்பட்டது. புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து, சிவாச்சாரியார்கள் முன்னிலையில் பொன்னியம்மன், விசாலாட்சி அம்மன், விஸ்வநாத ஸ்வாமி, ராஜ கணபதி, சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு விமான கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆறாம் தேதி முதல் யாகசாலையில் கால பூஜை துவங்கி, இன்று குருக்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை தலையில் சுமந்தவாறு விமான கலசம், உற்சவர், மூலவர், பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கலசத்திற்கும் புனித நீர் ஊற்றினர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி