பெரியபாளையம் அருகே 2019 மார்ச் 13 அன்று மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பனை அடித்துக் கொன்ற வழக்கில், தேவஜித் என்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இருவர் தலைமறைவாகினர். தேவஜித் மட்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.