சென்னையில் பூந்தமல்லி கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட வழித்தடம் 4 ல் இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. தண்டவாளத்தின் செயல் திறன், சிக்னலிங் அமைப்பு, ரயில் பெட்டியின் இயக்கத்திறன், பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், பூந்தமல்லி முதல் வடபழனி வரை 16 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும். போரூர் முதல் வடபழனி வரை 5 முதல் 10 கி.மீ. வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையப் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.