அலாரம் சத்தம் கேட்டு உண்டியல் பணத்தை வீசி சென்ற மர்ம நபர்

4பார்த்தது
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று இரவு தாயார் சன்னதியில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு மர்ம நபரால் திருடப்பட்டுள்ளது. காவலாளி ஜெயக்குமார் மட்டும் பணியில் இருந்தபோது அலாரம் சத்தம் கேட்டு பார்த்தபோது, மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். உண்டியலில் இருந்து திருடப்பட்ட பணம் சிதறி கிடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you