வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் நவம்பர் 18 முதல் 23-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு துவங்கிய மழை பரவலாக விடிய விடிய கொட்டி தீர்த்தது. பூண்டி, திருப்பாச்சூர், வெங்கத்தூர், காக்களூர், ஈக்காடு, தலைக்காஞ்சேரி, பாண்டூர், பட்டறைபெரும்புதூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால், அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.