திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு
By Joshua 0பார்த்ததுதிருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் தாமரைப்பாக்கம் 11.6 சென்டிமீட்டர் மழையைப் பதிவு செய்துள்ளது. செங்குன்றம் 9.6 செ.மீ., பொன்னேரி 9.4 செ.மீ., சோழவரம், கும்மிடிப்பூண்டி தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை 8.1 செ.மீ., ஆவடி 7.2 செ.மீ., திருவள்ளூர் 6 செ.மீ., பூண்டி 4.7 செ.மீ., திருவாலங்காடு, பூவிருந்தவல்லி தலா 4.3 செ.மீ., பள்ளிப்பட்டு 3.6 செ.மீ., ஜமீன் கொரட்டூர் 3 செ.மீ., திருத்தணி 2.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 921 மில்லி மீட்டர் மழையும், மாவட்டத்தின் சராசரி மழையளவு 61.40 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.