திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரி கிராமத்தில் உள்ள கொண்ணையம்மன் கோயிலில், நேற்று முன்தினம் பிற்பகல் பூட்டு உடைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா வயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது. பூசாரி மனைவி தேவகி கோயிலைத் திறக்கச் சென்றபோது இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து ஊர்மக்களுக்குத் தெரிவித்தார். கிராம மக்கள் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.