திருவள்ளூர்: வீரராகவர் சாமி கோயிலில் நடைபெற்ற வசந்த உற்சவம் நிறைவு

79பார்த்தது
பங்களா தோட்டத்திற்கு கோவிலில் இருந்து திருக்குளம் வழியாக எழுந்தருளிய வீரராகவப் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். 

இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் திருக்குளம் அருகே உள்ள பங்களா தோட்டத்தில் கடந்த மூன்றாம் தேதி முதல் நடைபெற்றது. பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருக்குளம், மாட வீதிகள் வழியாக சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதாளம் முழங்க எழுந்தருளினார். அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. 

அதன் பின்னர் சாமி புறப்பாடு நடக்கிறது. 4 மாட வீதிகள் வழியாக சாமி உலா வந்து கோவிலுக்குள் சென்றடைவார். வசந்த உற்சவம் விழா நேற்று 7ஆம் தேதி நிறைவு அடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை அகோபிலா மட கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்
Job Suitcase

Jobs near you