ரவுடி மாமாவை கொலை செய்தவர்களை பழிவாங்க காத்திருந்த மைத்துனர்

0பார்த்தது
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில், கடந்த ஆண்டு மாமன் குள்ளசீனுவை கொலை செய்தவர்களை பழிவாங்க திட்டம் தீட்டிய ஆப்ரோஸ் (21) என்பவரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டையும் பறிமுதல் செய்தனர். மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆப்ரோஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உடல்நிலையை கருத்தில் கொண்ட நீதிபதி, குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து சொந்த ஜாமினில் விடுவித்தார்.

தொடர்புடைய செய்தி