திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி அருள்மிகு மின்னொளி அம்மன் ஊன்றீஸ்வரர் கோவில் திருவேற்காடு அவர்களின் கருமாரியம்மன் திருக்கோவிலில் உப கோவில் ஆகும். சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம். திருமண தடை உள்ளவர்கள், கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்கள் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நிவர்த்தி பெறலாம். இந்த கோவிலில் நெய் தீபம் ஏற்றி மின்னொளி அம்பாளை தரிசித்தால் கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் நிவர்த்தி பெறுவார்கள் என்ற ஐதீகம் உள்ளதால் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் இழந்து போன கண் பார்வை திரும்புவது மட்டுமின்றி, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பிரச்சனை தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.