திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே நிலத்தகராறில் அண்ணனை வெட்டிய வழக்கில் தம்பி சோமசுந்தரம், சண்முகசுந்தரம், பூபதி, ஆசைத்தம்பி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பொன்னேரி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அண்ணனை கொலை செய்ய முயன்ற வழக்கில் தம்பி சோமசுந்தரம் மற்றும் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.