திருவள்ளூர் அருகே, 13 வயது சிறுமியை சீரழித்த தாயின் இரண்டாவது கணவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆறு மாத சிறை தண்டனையும் விதித்து திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த தரணி (54) தனது மனைவியின் முதல் கணவருக்குப் பிறந்த 13 வயது சிறுமியை, அவரது தாயின் ஒத்துழைப்புடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். சிறுமி அளித்த தகவலின் பேரில், போலீசார் தரணி மற்றும் தாயைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.