திருவள்ளூர் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்து 5 லட்சம் கோடி கடன் வாங்கி, மக்களிடம் வரி வசூலிப்பதாக குற்றம் சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து மீனவர்களுக்கு துரோகம் செய்ததாகவும், ஸ்டாலின் மன்னர் ஆட்சியை கொண்டு வர முயல்வதாகவும் அவர் கூறினார். அதிமுக ஆட்சியில் வரி உயர்வு இல்லை என்றும், கொரோனா காலத்தில் திறமையாக செயல்பட்டதாகவும் தெரிவித்தார். மக்கள் திமுக மீது கோபத்தில் இருப்பதாகவும், வாக்குப்பதிவு இயந்திரம் உடையும் அளவுக்கு அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் பேசினார்.