முதல்வரின் தாயுமானவர் திட்டம் மூலம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று செவ்வாய்க்கிழமை ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். இந்த மாதத்திற்கான தகுதியான பயனாளிகளுக்கு இந்த சிறப்பு சேவை வழங்கப்படும். இதன் மூலம், இம்மாவட்டத்தில் மட்டும் 46,050 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.