சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடகடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.