புதிய பேருந்து நிலையத்தில் பணிகள்: பேருந்து இயக்கம் எப்போது?

2பார்த்தது
புதிய பேருந்து நிலையத்தில் பணிகள்: பேருந்து இயக்கம் எப்போது?
திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள வேடங்கிநல்லூரில் ரூ. 36 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், 90% பணிகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி அவசரமாக திறக்கப்பட்டது. பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், கட்டுமானப் பணிகள், சாலை அமைத்தல், சுற்றுச்சுவர் மற்றும் மின் இணைப்பு போன்ற பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் 50 பேருந்துகள் வரை நிறுத்தும் வசதிகளுடன் கூடிய இந்த பேருந்து நிலையம் எப்போது முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி