சாலையில் கிடந்த ரூ. 53 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபர்

2பார்த்தது
மதுரவாயலைச் சேர்ந்த காளீஸ்வரன் (39) என்பவர், தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை, நெற்குன்றம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் கிடந்த ஒரு கவரில் சுமார் ₹53,700 பணம் இருந்ததைக் கண்டார். அவர் பணத்தை பத்திரமாக எடுத்து, அக்கம் பக்கத்தில் விசாரித்தும் யாருக்கும் சொந்தமில்லை எனத் தெரியவே, மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பணம் கிடைத்த இடம் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு உட்பட்டது எனத் தெரிந்ததும், அங்கு கொண்டு சென்று ஒப்படைத்தார். நேர்மையாக பணத்தை ஒப்படைத்த காளீஸ்வரனின் செயலைப் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி