திருவள்ளூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிறுபான்மை துறை மற்றும் வக்பு வாரிய அமைச்சர் சாமு நாசர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். 17 முதல் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.