சென்னை திருவொற்றியூரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் ஆடு, கோழி, மீன், இறால், கருவாடு, முட்டை போன்ற அசைவப் பொருட்களைப் படையலாக வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த அசைவப் படையலை உண்டால் சகல நோய்களும் நீங்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படையலைப் பெற்று உண்டனர்.