திருவள்ளூர்: ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருட்டு

499பார்த்தது
திருவள்ளூர் அருகே சேலை கிராமத்தில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் சித்துராஜ் வீட்டில், அவர் வெளியூர் சென்றிருந்தபோது மர்ம நபர்கள் வென்டிலேட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவில் இருந்த ₹1.5 லட்சம் பணம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள் மற்றும் சிலிண்டர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி