சென்னை: தீப்பற்றி எரிந்த ராட்சத கிரேன்; பரபரப்பு

57பார்த்தது
சென்னை: தீப்பற்றி எரிந்த ராட்சத கிரேன்; பரபரப்பு
சென்னையில் தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோமீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோமீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோமீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, கோவிலம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோடு பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதில், 7 பேர் கொண்ட குழுவினர், கான்கிரீட் பாதை அமைக்க போடப்பட்ட தடுப்பு பலகைகளை, 50 டன் கொண்ட ராட்சத கிரேன் மூலம் அகற்றும் பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். நள்ளிரவில், டிரைவர் கிரேனை இயக்கியபோது, அதன் பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. காற்றில் தீ பரவி கிரேன் மீது பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக டிரைவர், கீழே குதித்து தப்பினார். பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால், தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், மேடவாக்கம் மெயின் ரோட்டில் போக்குவரத்தை தடை செய்தனர்.

தொடர்புடைய செய்தி