16ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூரில் தீவிரமடையும் கனமழை. தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) இரவில் இருந்தே பருவமழை பெய்யத் தொடங்க இருக்கிறது. மேலும் வரும் 16ம் தேதி முதல், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை தீவிரமைடையும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.