
மன்னார்குடி: விஷம் குடித்த தம்பதி.. கணவன் பலி
திருத்துறைப்பூண்டியில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட தங்கவேலு (65) ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த அவரது மனைவி பிரேமா (58) என்பவரும் விஷம் குடித்தார். இருவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தங்கவேலு திங்கள்கிழமை உயிரிழந்தார். பிரேமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

























