மன்னார்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், காதலித்து கர்ப்பமாக்கியதாகக் கூறப்படும் வினோத் (21) என்பவரை மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸார் தேடி வருகின்றனர்.