திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக விளைநிலங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, மன்னார்குடி அருகே காரிக்கோட்டை, எம் பேத்தி, அத்திக்கோட்டை கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. நேற்று மாலை முதல் விடிய விடிய பெய்த மழையால் மன்னார்குடியில் 90 மிமீ, நீடாமங்கலத்தில் 102.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், மழைநீரை விரைவாக வடிய வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.