திருவாரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியில் இருந்து விலகிய 500 பேர், முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திருவாரூர் ஒன்றியம் குறும்பேரியைச் சேர்ந்த மணிகண்டன், ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி, மன்னார்குடியில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இணைந்த அனைவருக்கும் கட்சி கரையுடன் கூடிய வேட்டி அணிவித்து இரா. காமராஜ் வரவேற்றார். இந்த நிகழ்வில் கட்சியின் அமைப்பு செயலாளர் சிவா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆசைமணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.