திமுக அரசை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

3பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசலில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்காமல் திட்டத்தை முடக்க நினைப்பதாகவும், 125 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ் காமராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி