திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சாமி கோவிலில் திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவை ஒட்டி இன்று காலை 10 மணியளவில் ராஜகோபுர வாயிலில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. தர்ப்பைபுல், மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, தீட்சிதர்கள் மந்திரம் ஓத நவதானியங்கள் தூவி பந்தல் கால் நடப்பட்டது. கோவில் பிரகாரத்தில் யாகசாலை அமைய உள்ள இடத்திலும் பந்தல் கால் நடப்பட்டது.