திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாஜக சார்பில் 'நாளை நமதே தமிழ்நாடும் நமதே' என்ற தலைப்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு தமிழகத்திற்கு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து பாஜக நிர்வாகிகள் உரையாற்றினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன் உள்ளிட்ட பலர் இந்த பிரசாரத்தில் கலந்துகொண்டனர்.