தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ முதல்வர் புகைப்படம், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பிற அரசு கட்டிடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.