இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 136-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள கண்டகிரயம் எக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் உற்சாகத்துடன் தினத்தைக் கொண்டாடினர். மாணவர்கள் நேருவின் ஓவியத்தை வரைந்து, முகமூடி அணிந்து, கேக் வெட்டி, வண்ண பலூன்களுடன் மகிழ்ந்தனர். தலைமை ஆசிரியர் க.தங்கபாபு, ஆசிரியர் பெ.சோமசுந்தரம், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் கா.சரண்யா ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.