மன்னையில்ஆய்வு செய்ய நகர மன்றத் தலைவர்

69பார்த்தது
மன்னையில்ஆய்வு செய்ய நகர மன்றத் தலைவர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்ப் பகுதியில் சாலை, குடிநீர், மின் விளக்கு, பாலம், பேருந்து நிலையம், பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனை மன்னார்குடி நகர மன்றத் தலைவர் மன்னை சோழ ராஜன் தினந்தோறும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி கீழ செங்குந்த முதலியார் தெரு - கீழ ஒற்றைத் தெரு இடைப்பட்ட நாராசம் பகுதிகளை தூய்மை செய்து பேவர் பிளாக் சாலை அமைக்க குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை இன்று நகர மன்றத் தலைவர் மன்னை சோழராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி