மன்னார்குடி: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

320பார்த்தது
மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினசரி 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு பணியாற்றிய தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து மே.7-ல் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனிடையே நிலுவையில் உள்ள சம்பள பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி