திருவாரூர்: காளி வேடம் அணிந்து பக்தர்கள் வீதி உலா

385பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வாணக்கார தெரு காளியம்மன் கோவிலில் கடந்த 15 ஆம் தேதி மாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பச்சைக்காளி, பவளக்காளி வேடமணிந்து நடனமாடியபடி ஊர்வலமாக சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் காளியம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி