வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தும் திருவாரூர் மாவட்டத்தில் 15 நாட்களாக மழை இல்லாத நிலையில், இன்று அதிகாலை மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. காலை 8 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பாமணி, சவளக்காரன் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் லேசான மழை பதிவானது.