திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து, பகலில் வெயிலும் இரவில் குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண் போர்வை போர்த்தியது போல் பனி சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் செல்கின்றனர். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் கடும் குளிரால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.