திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியில், திருமணமாகி 2 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் கணவன் ஐயப்பன், மனைவி ஜெயசித்ரா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஐயப்பன், மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஜெயசித்ராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.