மன்னார்குடியில் கலைகட்டிய பேஷன் ஷோ

168பார்த்தது
மன்னார்குடியில் இன்று நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் 3 முதல் 14 வயதுடைய 30 சிறுவர் சிறுமிகள் பங்கேற்றனர். உலகின் பல்வேறு மக்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வண்ணமயமான ஆடைகளை அணிந்து, மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். திரை இசை பாடல்களுக்கு நடனமாடியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். சிறுவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் ரசனையை வெளிப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி