திருவாரூர் மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கலை கல்லூரியில் மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா பங்கேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், வேளாண் துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.