வடுவூரில் ஒலிம்பிக் வீரர் ராஜசேகரனுக்கு சிலை (VIDEO)

274பார்த்தது
வடுவூரைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ராஜசேகரனுக்கு வடுவூர் உள் விளையாட்டு அரங்கத்தில் சிலை அமைக்க நேற்று (ஆகஸ்ட் 15) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற இவர், 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று வடுவூரின் பெருமையை உயர்த்தினார். இவரது சிலைக்கு கடந்த ஆண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி