திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர். பின்னர் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, மகளிருக்கு கிடைக்கக்கூடிய உரிமைத் தொகையை நிறுத்துவதற்கு எதிரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், யாரும் சிந்திக்காத வகையில் முதலமைச்சர் மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதாகவும் கூறினார். அதிமுக-பாஜக கூட்டணியினர் இது தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் தொகை என கூறி வருவதாகவும், இது மகளிர்க்கான உரிமைத் தொகை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளையும் துரோகத்தையும் செய்வதாகவும், முதலமைச்சர் மக்களை திறம்பட பாதுகாத்து வருவதாகவும் அமைச்சர் பேசினார்.